குர்ஆன் ஓதுதல்

குர்ஆனில் வழக்கமாக

குர்ஆனில் வழக்கமாக குர்ஆனில் சில பகுதிகள் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் சிறப்பாக சுன்னத்தாகும். தினமும் ஒவ்வொரு ஃபர்ள் தொழுகைக்குப் பிறகும் கீழே கூறப்பட்டவை சுன்னத் ஆகும். ஸூரத்துல் ஃபாதிஹா. ஸூரத்துல் இக்லாஸ் (112-ஆம…

குர்ஆனில் வழக்கமாக

குர்ஆனில் வழக்கமாக

குர்ஆனில் சில பகுதிகள் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் சிறப்பாக சுன்னத்தாகும். தினமும் ஒவ்வொரு ஃபர்ள் தொழுகைக்குப் பிறகும் கீழே கூறப்பட்டவை சுன்னத் ஆகும்.

ஸூரத்துல் ஃபாதிஹா.
ஸூரத்துல் இக்லாஸ் (112-ஆம் அத்தியாயம்).
ஸூரத்துல் ஃபலக் (113-ஆம் அத்தியாயம்).
ஸூரத்துன்னாஸ் (114-ஆம் அத்தியாயம்).
ஆயத்துல் குர்ஸிய்ய் (அல் பகரா: 255).
ஷஹிதல்லாஹு... (ஆலு இம்ரான் 18).

தூங்க நினைத்தால் இந்த ஆறு தவிர,

ஆமனர்ரஸூல் (அல் பகரா: 284-286).
ஸூரத்துல் காஃபிரூன் (109-ஆம் அத்தியாயம்)
இவற்றையும் ஓதுவது சுன்னத் ஆகும்.

ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை கீழே கூறப்பட்ட ஆயத்துகளை ஓதுவது சுன்னத்.

லௌ அன்சல்னா (ஹஷ்ர்: 20-24).
ஹாமீம்..... (காஃபிர்: 1-3).
அஃபஹஸிம்..... (முஃமினூன்: 115).

ஏழு ஸூராக்களை தினமும் வழக்கமாக்குவது சுன்னத் ஆகும்.

அலிஃப் லாம் மீம் ஸஜ்தா (32-ஆம் அத்தியாயம்).
ஸூரத்து யாஸீன் (36-ஆம் அத்தியாயம்).
ஸூரத்துத் துகான் (44-ஆம் அத்தியாயம்).
ஸூரத்துல் வாகிஅஹ் (56-ஆம் அத்தியாயம்).
ஸூரத்துல் முல்க் (67-ஆம் அத்தியாயம்).
ஸூரத்துஸ் ஸல்ஸலா (99-ஆம் அத்தியாயம்).
ஸூரத்துத்தகாஸுர் (102-ஆம் அத்தியாயம்).

இவற்றை வழக்கமாக்க முடியாவிட்டால் ஸஜ்தா, வாகிஅஹ் ஆகிய ஸூராக்களையாவது இரவில் வழக்கமாக ஓத வேண்டும். மரண நிலையிலுள்ள ஒருவரின் அருகில் ஸூரத்து யாஸீன், ஸூரத்துர் ரஅ்த் ஆகியவற்றை ஓதுவது சுன்னத் ஆகும். இவை அனைத்தும் ஹதீஸ்களில் வந்தவையாகும்.